உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தீபாங்கர் தத்தா இன்று பதவி ஏற்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 26-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் ஒன்று கூடியது. அதில் ஏழு நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்காக மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்தது.

அதில் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபாங்கர் தத்தாவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.  

இந்த பரிந்துரையை ஏற்றுகொண்ட மத்திய அரசு, தீபாங்கர் தத்தாவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதன் படி, உச்ஜ்ச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தீபாங்கர் தத்தாவுக்கு தற்போது 57 வயது ஆகிறது. பொதுவாக நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது என்பதால், அவர் வருகிற 2030-ம் ஆண்டு வரை நீதிபதி பதவியில் இருப்பார். 

இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தீபாங்கர் தத்தா இன்று காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்க உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today Dibangar Dutta take office in supreme court justice


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->