கிருஷ்ண ஜெயந்தியின் போது பஜ்ஜி சாப்பிட்டவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!
Tragedy happened to those who ate bajji during Krishna Jayanti
நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, பக்வீட் மாவில் செய்யப்பட்ட பஜ்ஜியை சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் பிரியங்கா கூறுகையில், இரவு பக்வீட் மாவில் செய்யப்பட்ட பஜ்ஜிகளை சாப்பிட்டதாகவும், பின்னர் நான் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன் என்றும், தொடர்ந்து வயிற்றில் எரியும் உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இதேபோல நோயாளி ஒருவருடன் வந்த பார்காம் கிராமத்தை சேர்ந்த ஒருவர், பஜ்ஜியை உட்கொண்ட பிறகு அங்கிருந்தவர்களுக்கு தலைச்சுற்றல், வாந்தி மற்றும் நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
வாந்தி மற்றும் பதட்டம் போன்ற புகார்களுடன் அதிகாலை 1 மணியளவில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக ஒரு மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
English Summary
Tragedy happened to those who ate bajji during Krishna Jayanti