மே. வங்கம் : காரக்பூர் ரயில் நிலையத்தில் தடம் புரண்ட ரெயில் பெட்டி.! - Seithipunal
Seithipunal


மே. வங்கம் : காரக்பூர் ரயில் நிலையத்தில் தடம் புரண்ட ரெயில் பெட்டி.!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டம் காரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயிலின் பெட்டி ஒன்று தடம் புரண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று இரவு 9 மணியளவில் மெதினிபூரிலிருந்து ஹவுரா செல்லும் உள்ளூர் ரயில் ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காரக்பூர் ரயில் நிலையத்தில் 
திடீரென ரயிலில் இருந்து ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்தப் பெட்டியில் யாரும் பயணம் செய்யவில்லை. இந்த விபத்தினால் சுமார் அரை மணி நேரத்திற்கு அந்த பாதையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் என்ஜினில் இருந்து கடைசியாக உள்ள அந்தப் பெட்டியை, லைனிலிருந்து அகற்றிய பிறகு, அந்த பாதையில் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. 

சமீபத்தில் ஒடிசாவில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்த பஹாநகர் பஜார் ரயில் நிலையத்திலிருந்து 140 கிமீ தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் ரயில் விபத்துகளால் பயணிகள் கடுமையான அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train box derain in west bengal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->