ஆணாக மாற ஆசைப்படும் பெண் காவலர்.. பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு அனுமதி.!
Transchange operation allowed women police in madhya pradesh
ஆணாக மாற ஆசைப்படுவதாக அனுமதி கேட்ட பெண் காவலருக்கு மத்திய பிரதேசம் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் தீபிகா கோத்தாரி என்ற பெண் காவலராக பணியாற்றி வருகிறார். பெண்ணாக பிறந்து வளர்ந்த இவர் ஆணாக தன்னை உணர்ந்து, பாலின அடையாள சிக்கல்களை அதிகம் எதிர்கொண்டுள்ளார். இதனையடுத்து பாலினமாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறுவதற்கு விரும்பியுள்ளார்.
ஆனால் தான் ஒரு அரசு ஊழியர் என்பதால், பாலின மாற்று அறுவை சிகிச்சை குறித்து கடந்தாண்டு மாநில அரசுக்கு விண்ணப்பித்துள்ளார். அரசு ஊழியர்களின் பாலின மாற்ற கோரிக்கையை அனுமதிப்பது தொடர்பாக தெளிவான அரசு விதிமுறைகள் ஏதும் தற்போது நடைமுறையில் இல்லை.
எனவே தனது பாலினத்தை உறுதி செய்யும் அந்த நபரின் கோரிக்கையை அரசால் தவிர்க்கவும் முடியாது. இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்த்தி யாதவ் என்ற பெண் காவலர் பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தீபிகா கோத்தாரிக்கு மாநில உள்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெண் ஊழியர்களுக்கான சலுகைகள் எதுவும் இணை தீபிகாவுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Transchange operation allowed women police in madhya pradesh