திருநங்கைகளுக்கு அடையாள அட்டை: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு, நாடு முழுவதும் சுமார் 15 803 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அண்மையில் முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளது. 

அதில், திருநங்கைகான தேசிய இணையதளத்தில் திருநங்கை அடையாள அட்டை கேட்டு மொத்தம் 24,115 விண்ணப்பங்கள் வந்தன. 

இதில் 15,803 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 4307 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் 2,478, ஒடிசாவில் 2237, ஆந்திரா 2124 பேருக்கும் திருநங்கைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் மற்றும் மீசோரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. 

அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, கோவா போன்ற மாவட்டங்களில் 2,7, 11 என்ற எண்ணிக்கையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 

30 நாட்களுக்கும் மேலாக 3225 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் நிலுவையை குறைப்பதற்காக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. 

கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 4,87,83 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்று தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transgender Identity Card Central Government Information


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->