கோவா : புதிய விமான நிலையத்தில் நேற்று முதல் போக்குவரத்து ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


கோவா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மோபாவில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி கடந்த மாதம் 11-ந்தேதி திறந்து வைத்தார். 

இந்நிலையில், இந்த விமானநிலையத்தில் நேற்று முதல் விமான போக்குவரத்து ஆரம்பமானது. அதன்படி, இந்த விமான நிலையத்தில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 179 பயணிகளுடன் முதல் பயணிகள் விமானம் தரையிறங்கியது. 

அங்கு இந்த விமானத்தின் மீது தண்ணீரை அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மற்றும்அமைச்சர்கள் வரவேற்றனர்.

அதன் பின்னர் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனை. இன்று முதல் கோவாவில் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன" என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport service start in gova new airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->