ரூ.5000க்காக குழந்தையை விற்ற பழங்குடியின பெண்!!
Tribal woman sold child for Rs5000
திரிபுரா மாநிலத்தில் பெற்ற குழந்தையை வறுமையின் காரணமாக 37 வயதான பழங்குடியின பெண் குழந்தையை விற்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுராவின் கந்தசேராவில் உள்ள தாராபன் காலனியைச் சேர்ந்த மோர்மதி பெண் வசித்து வருகிறார். அவரது கணவர் சமீபத்தில் தற்கொலை செய்து இறந்து கொண்டார். கர்ப்பமாக இருந்து வந்த அவருக்கு கடந்த புதன்கிழமை குழந்தை பிறந்துள்ளது.
கணவர் இறந்ததற்குப் பின்பு தனிமையில் வறுமையில் சிக்கி தவிர்த்து வந்த நிலையில் குழந்தை பிறந்ததால், வறுமையின் காரணமாக பிறந்த குழந்தையை ஹெஜமாராவில் பகுதியில் குழந்தை இல்லாமல் வசிக்கும் தம்பதிக்கு ரூ.5000க்கு குழந்தையை விற்றுள்ளார்.
கணவர் இறந்த பின் கர்ப்பமான மோர்மதி கருவை கலக்க முயற்சி செய்து உள்ளார். மருத்துவர்கள் ஆலோசனைக் கூறி கருவை கலைக்காமல் மருந்து மாத்திரைகள் வழங்கி உள்ளனர். வறுமையின் காரணமாக ரேஷன் கார்டையும் அடகு வைத்துள்ளார். இது தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய தம்பதியினரிடம் இருந்து குழந்தையை வைத்து குழந்தையின் தாயாரிடம் ஒப்படைத்தனர். வறுமையின் காரணமாக பழங்குடியின பெண் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tribal woman sold child for Rs5000