பயிற்சி மருத்துவர் கொலையின் பின்னணியில் திரிணாமூல் காங்கிரஸ்?...சி.பி.ஐ-யின் அடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


மேற்குவங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ந்தேதி பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ப்ளூடூத் அடிப்படையில், சஞ்சய் ராய் என்ற நபரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். 

தொடர்ந்து இதற்கு நீதி கேட்டும், பெண் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் தற்போது வரை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீராம்பூர் தொகுதி சட்டமான உறுப்பினர் சுதிப்தோ ராயிடம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதிப்தோ ராய்க்கு சொந்தமான முதியோர் இல்லத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேவேளை ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நோயாளிகள் நலக்குழு தலைவராக சுதிப்தோ ராய் பதவி வகித்து வருகிறார். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்ததாகவும், இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு தெரிந்த விவரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trinamool Congress behind trainee doctor murder Do you know what the CBI next step is


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->