200 அடி பாலத்தில் பறந்த லாரி!...கீழே சென்ற தண்ணீர் லாரி மீது விழுந்து நொறுங்கி விபத்து!...ஓட்டுநர்களின் நிலை? - Seithipunal
Seithipunal


200 அடி பள்ளத்தில் இருந்து டிரக் லாரி பறந்து சென்று சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி - அஜ்மீர் விரைவுப் பாலத்தில் அஜ்மீர் நோக்கி லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஓட்டுநர் அதிவேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், லாரி சாலையில் இருந்து விலகி எக்ஸ்பிரஸ் வே தடுப்புகளை உடைத்துக் கொண்டு கீழே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது விழுந்துள்ளது.  இந்த விபத்தில் தண்ணீர் லாரி டிரைவர் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியதாக போலீஸார் தெவித்துள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கிரேன் மூலம் லாரி மற்றும் டேங்கர் லாரியை சாலையில் இருந்து அகற்றி சாலையோரத்தில் அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. 200 அடி பள்ளத்தில் இருந்து டிரக் லாரி பறந்து சென்று சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Truck flies over 200ft bridge water falls on truck and crashes condition of drivers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->