மகாராஷ்டிரா || இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்த வீடு - 2 குழந்தைகள் பலி.!
two childrens died inmaharastra for fire accident
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் அருகே ஹசாரிபகாத் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இந்த குடிசைப்பகுதியில் தீபாளி என்பவர் தனது 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கணவர் பிரிந்து வாழும் இவர் வீட்டு வேலைகள் செய்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் தீபாளி, நேற்று வீட்டு வேலைக்காக வெளியே சென்றிருந்தார். இதேபோல், அவரது மூத்த மகனும் வெளியே சென்றிருந்த நிலையில், மூன்றுக்கு குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
அப்போது, சிறுமி அடுப்பை பற்ற வைக்க முயன்றதில், எதிர்பாராதவிதமாக தீ பரவி வீடு முழுவதும் பற்றி எரியத்துவங்கியது. இதைப்பார்த்து பயந்து போன சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட, சிறுவர்கள் இருவரும், வீட்டிற்குள் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், இவர்கள் வீடு அமைந்துள்ள பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் தீயணைப்பு வாகனம் வருவதற்கு தாமதமானதால், அதற்குள் வீடு முழுவதும் எரிந்து, வீட்டில் இருந்த சிறுவர்கள் இருவரும் உடல்கருகி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி சிறுவர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two childrens died inmaharastra for fire accident