அதிர்ச்சி - திரிபுராவில் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!
two crores worthable drugs tablet seizdin tripura
திரிபுரா மாநிலத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்த முயன்ற நபரை கைது செய்த போலீசாருக்கு முதலமைச்சர் மாணிக் சஹா பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.
திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தில் அம்பாஸ்சா பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி, சோதனையிட்டனர்.
இ
ந்த சோதனையில், ரூ.2 கோடி மதிப்புள்ள சுமார் 80 ஆயிரம் யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த வாகனத்தின் ஓட்டுநரையும் போலீசார் கைது செய்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் உள்ளனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கைக்கு முதலமைச்சர் மாணிக் சஹா தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார். கடந்த 30-ந்தேதி, தீபாவளியை முன்னிட்டு அசாம் ரைபிள் படையினர் நடத்திய சோதனையில், 90 ஆயிரம் யாபா மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
two crores worthable drugs tablet seizdin tripura