மாற்று சாதியில் திருமணம் - பெற்ற பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை, மகன்.!
two peoples arrest murder omen in up for other cast marriage
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் நேஹா ரத்தோர். இவர் ஹாபூr பகுதியை சேர்ந்த சூரஜ் என்ற வேறு சாதி இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதற்கு நேஹாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி நேஹா காசியாபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் சூரஜை திருமணம் செய்து கொண்டார். இதையாரிந்த நேஹாவின் தந்தை மற்றும் சகோதரர் இருவரும் சம்பவ இடத்திற்குச் சென்று நேஹாவைப் பிடித்து வந்து கடந்த 12-ந்தேதி ஆணவக் கொலை செய்துவிட்டு உடலை எரித்து ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் நேஹாவை ஆணவக் கொலை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பானு ரத்தோர், ஹிமான்ஷு ரத்தோர் இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறு சாதி இளைஞரை திருமணம் செய்த இளம்பெண்ணை அவரது தந்தை மற்றும் சகோதரன் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrest murder omen in up for other cast marriage