விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி பயிர்களுக்கு MSPயை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் !!
union government approved the increase of minimum support price
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று புதிய மோடி 3.0 அரசு அமைந்த பிறகு முதல் கையெழுத்து விவசாயிகளின் நலனுக்காக என மோடி அறிவித்தார், அதேபோல் தற்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 14 காரீப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தற்போது நடைபெற்றது. மேலும் இன்றைய முடிவால் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். இது கடந்த பருவக்காலத்தை காட்டிலும் சுமார் 35000 கோடி ரூபாய் அதிகம் என்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2300 என மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை கடந்த ஆண்டை விட ரூ.117 அதிகம். அதேபோல துவரம் பருப்பின் MSP ரூ.7550 ஆகும், இது கடந்த ஆண்டை விட ரூ.550 அதிகம்.
மேலும் உளுத்தம் பருப்பின் குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த ஆண்டை விட ரூ.7400 ஆகும், இது ரூ.450 அதிகம். மூங்கின் MSP ரூ.8682 ஆகும், இது கடந்த ஆண்டை விட ரூ.124 அதிகம். வேர்க்கடலையின் குறைந்தபட்ச விலை ரூ.406 அதிகரித்து ரூ.6783 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதேபோல் எள் விலை ரூ.632 அதிகரித்துள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்புதலில் வாரணாசியின் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கொள்ளளவை அதிகரிக்க, 75 ஆயிரம் சதுர அடியில் புதிய டெர்மினல் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் திறன் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளாக இருக்கும்.
English Summary
union government approved the increase of minimum support price