புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு - டெல்லியில் அல்ல.. இங்கு தான்..! - உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்..!! - Seithipunal
Seithipunal



நாடு முழுவதும் நேற்று (ஜூலை 1) முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. முன்னதாக இந்திய தண்டனை சட்டம் (ஐ. பி. சி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சி. ஆர். பி சி), இந்திய சாட்சியங்கள் சட்டம்  ஆகிய பழைய சட்டங்களுக்கு மாற்றாக இந்த 3 புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இவை நேற்று அமலுக்கு வந்த நிலையில், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் டெல்லியில் ரயில்வே மேம்பாலத்தில் நடைபாதையில் கடை வைத்திருந்த ஒரு தள்ளுவண்டி கடைக்காரர் மீது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர் கடை வைத்திருப்பதாக கூறி முதல் வழக்கு பதியப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் அவரை மன்னித்து, அந்த வழக்கை நீக்கி விட்டதால் இது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் வழக்கு அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மோட்டார் சைக்கிள்  திருடியதாக இதே பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுவே புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவான முதல் வழக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக இருசக்கர வாகன ஓட்டிகள் இருவர் மீது முதல் வழக்கு ஹைதராபாத்தில் பதியப் பட்டுள்ளது. மேலும் நேற்று இந்த சட்டம் அமலுக்கு வந்த ஒரே நாளில் டெல்லியில் மட்டும் சுமார் 300 வழக்குகள் பதியப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Home Minister Amit Shah Says About First Case Filed Under New Criminal Law


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->