மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை..3 சிறுவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது!
Union minister's daughter sexually harassed Four people, including three children, have been arrested.
சிவராத்திரியை யொட்டி நடைபெற்ற யாத்திரையில் பாஜக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் முக்தைநகரில் உள்ள கோதாலி கிராமத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 28-ந் தேதி இரவு சிவராத்திரியை யொட்டி நடைபெற்ற யாத்திரையில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை மந்திரியான ரக்ஷா கட்சேவின் மகள் மற்றும் அவரது தோழிகள் சிலர் கலந்துகொண்டனர். அப்போது, அங்கிருந்த சிறுவர்கள் குழுவால் மத்திய மந்திரியின் மகள் மற்றும் அவரது தோழிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி ரக்ஷா கட்சே, முக்தைநகர் போலீஸ் நிலையத்தில் நேராக சென்று புகார் அளித்தார். அதனை தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இதில் ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவந்தனர் .

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர்,"எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்
இந்நிலையில், மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சேவின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Union minister's daughter sexually harassed Four people, including three children, have been arrested.