மினி டிரக் மீது பேருந்து மோதி கொடூர விபத்து! 12 பேர் பலி, 16 பேரின் நிலை என்ன?! - Seithipunal
Seithipunal



உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹத்ராஸ் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்துக்குறித்து வெளியான தகவலின்படி, ஹத்ராஸில் இருந்து ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கொடூர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்ததுடன், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் தரப்பில் இந்த விபத்து குறித்து தெரிவிக்கையில், ஆக்ரா- அலிகார் தேசிய நெடுஞ்சாலையில் வேனை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP bus crash accident 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->