கொடூர விபத்து! குழந்தைகள் உட்பட 17 பேர் பலி! குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்! - Seithipunal
Seithipunal


 
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ஹத்ராஸ் நெடுஞ்சாலையில் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கொடூர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் பலியானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த கொடூர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆகி உயர்ந்துள்ளது. இதில், நான்கு பெண்கள் உட்பட  பல குழந்தைகளும் அடக்கம் என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விபத்துக்குறித்து தகவல் அறிந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிதியுதவி வழங்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்களும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP Bus Mini Lorry Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->