நாட்டில் முடங்கிய யு.பி.ஐ. சேவைகள்; கூகுள் பே, போன்பே, பேடிஎம் பயனர்கள் அவதி..!
UPI services disrupted in the country
நாட்டில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யு.பி.ஐ. சேவை முடங்கியுள்ளது. இதனால் பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யு.பி.ஐ. (UPI) மூலம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. தற்போது கிராம புறங்களில் கூட பணப்பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பெரும்பாலான சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன.

இந்த நிலையில் நாடு தழுவிய அளவில் யு.பி.ஐ. சேவைகள் செயலிழந்துள்ளது. இதன்காரணமாக, கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர்.
மேலும், யு.பி.ஐ. சேவையைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பல்வேறு பயனர்களிடமிருந்து புகார்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக இன்று இரவு 07 மணி முதல் யு.பி.ஐ. செயல்படவில்லை என 23 ஆயிரம் புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பல்வேறு இணையதளப் பக்கங்கள் மற்றும் இணைய சேவைகளின் நிகழ் தரவுகளை வழங்கிவரும் டவுன்டிடக்டர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
UPI services disrupted in the country