கார் பார்க்கிங்கால் ஏற்பட்ட மோதல்.! ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம், காஜியாபாத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இரண்டு கார்களில் இருவர் உணவு அருந்த சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கார்களை பார்க்கிங்கில் நிறுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதையறிந்த ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அதில் இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி அங்கிருந்த கற்களால் தாக்கிக்கொண்டனர். இவர்களை தடுப்பதற்கு யாரும் முன்வராமல்  வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த தாக்குதலில் ஒருவர் மயங்கி கீழே விழுந்திருக்கிறார். ஆனாலும், கீழே விழுந்தவரை மற்றொருவர் தொடர்ந்து கற்களாலும், கைகளாலும் தாக்கியிருக்கிறார். அதை ஒருவர் தன் செல்போனில் படம் பிடித்திருக்கிறார். கீழே சரிந்தவரை ஆத்திரம் தீர தாக்கிய அந்த நபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 

அதன் பின்னர், அக்கம் பக்கத்தினர் கீழே விழுந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

இதுகுறித்து, காவல்துறை நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் டெல்லி காவல்துறையின் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் அருண் என்று அடையாளம் தெரியவந்துள்ளது. மேலும், குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

uttar pradesh car parking fight young man died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->