வெற்றிபெறும் அளவுக்கு விஜய்க்கு ஓட்டுகள் இல்லை; சினிமா வேறு, அரசியல் வேறு; அமைச்சர் ஐ.பெரியசாமி சாடல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் 40 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிதான் என்று தேனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; கடந்த 04 ஆண்டுகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்களால், இன்னும் 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக திமுக ஆட்சி தான் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இது, அந்த கட்சி இல்லாமல் போய் விட்டதற்கு சமம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இனி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக இருக்குமா?, இருக்காதா? என்பது சந்தேகம் தான்  என்றும் கூறியுள்ளார். இதேவேளை, பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை. மக்கள் வாக்களித்ததால் தான் வெற்றி பெற்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி இலக்கு என்றிருக்கிறோம். ஆனால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சினிமா வேறு, அரசியல் வேறு என்று மக்கள் பிரித்து பார்க்கிறார்கள். இதனால், வெற்றி பெறும் அளவுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஓட்டுகள் இல்லை என்றும் விஜய்யை மறைமுகமாக அவர் சாடியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister I Periyasamy says that Vijay does not have enough votes to win


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->