2 வருடம், பல மாணவிகள்! வீடியோ எடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 59 வயது பேராசிரியர் கைது!
Uttar Pradesh Government College Professor Harassment case
உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள அரசு முதுகலைக் கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக பணியாற்றிய 59 வயது ரஜ்னீஷ் குமார், கடந்த இரண்டு வருடங்களாக மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அவற்றை வீடியோவாக பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதலில், கல்லூரி நிர்வாகம் உள்விசாரணை நடத்தி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. ஆனால், தேசிய மகளிர் ஆணையம் (NCW) மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் பெயர் குறிப்பிடாமல் மாணவிகள் புகார் அளித்தனர். புகாரில், ரஜ்னீஷ் குமார் மாணவிகளுடன் ஆபாச நிலையில் இருப்பதை நிரூபிக்கும் 59 வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
விசாரணை நீண்ட காலமாக நடைபெற்ற நிலையில், மார்ச் 13 அன்று, அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் இருப்பவரால் பாலியல் வல்லுறவு) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, கல்லூரியில் இருந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். காவல்துறையின் நடவடிக்கையை உணர்ந்த அவர் தலைமறைவானார். 72 மணி நேரத்திற்குப் பிறகு, காவல்துறை அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
English Summary
Uttar Pradesh Government College Professor Harassment case