இண்டி கூட்டணியில் 6 எம்பி-களின் பதவி பறிபோகும் அபாயம்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தல் முடிவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்த போதிலும், பாஜக தனி பெரும்பான்மையை இழந்து இருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியதும் பாஜகவின் தோல்வியாக பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 6 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும் கைப்பற்றின. 

இந்நிலையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்களின் மீது உள்ள வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 . காஜிபூர் மக்களவை தொகுதி சமாஜ்வாதி எம்பி அப்சல் அன்சாரி :

காஜிபூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அப்சல் அன்சாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்து, தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜூலை மாதம் வழங்கப்படும் தீர்ப்பில் அவர் குற்றவாளி என்பது உறுதியானால், அவரின் எம்.பி. பதவி பறிக்கப்படும்.

2. அசம்கார் தொகுதி சமாஜ்வாதி எம்பி தர்மேந்திர யாதவ் :

அசம்கார் மக்களவை தொகுதி சமாஜ்வாதி எம்பி தர்மேந்திர யாதவ் மீது நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்படும்.

3. ஜான்பூர் மக்களவை தொகுதி சமாஜ்வாதி எம்பி பாபு சிங் குஷ்வாஹா ;

ஜான்பூர் மக்களவை தொகுதி சமாஜ்வாதி எம்பி பாபு சிங் குஷ்வாஹா மீது நிலுவையில் உள்ள சொத்து மோசடி உள்ளிட்ட 8 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்படும்.

4. சுல்தான்பூர் மக்களவை தொகுதி சமாஜ்வாதி எம்பி ராம்புவால் நிஷாத் :

சுல்தான்பூர் தொகுதி சமாஜ்வாதி எம்பி ராம்புவால் நிஷாத் மீது குண்டர் சட்டம் உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

5. சந்தவுலி மக்களவை தொகுதி சமாஜ்வாதி எம்பி வீரேந்திர சிங் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

6. சஹாரன்பூர் தொகுதி காங்கிரஸ் எம்பி இம்ரா மசூத் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு தாக்கல் செய்துள்ளது. 

இதுமட்டுமில்லாமல், சுயேச்சை எம்பி சந்திர சேகர் ஆசாத் மீது 30 வழக்குகள் நிலவையில் இருப்பதாகவும், இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு பேராபத்து ஏற்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh India Alliance Opposition MP Criminal Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->