#உத்திரப்பிரதேசம் || 24 மாணவிகளை தனியறையில் அடைத்து வைத்த இரு ஆசிரியர்கள்., மிரட்டல் - கைது.! - Seithipunal
Seithipunal


#உத்திரப்பிரதேசம் || 24 மாணவிகளை தனியறையில் அடைத்து வைத்த இரு ஆசிரியர்கள்., மிரட்டல் - கைது.!

உத்திரப்பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் பெக்ஜம் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் பல்லிக்கா வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கதியார் ஆகிய இருவருக்கும் பணிமாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இரண்டு ஆசிரியர்களும், அப்பள்ளியில் பயின்று வரும் 24 மாணவிகளை, பள்ளியில் மாடியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். 

தங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பணி இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை மிரட்டுவதற்காக இவ்வாறு அந்த ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவிகளை மீட்டு அவர்களது விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். துறை ரீதியாக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh some school incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->