#Breaking || இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து.! மல்யுத்த வீரர்கள் அதிர்ச்சி.!!
UWW has revoked recognition of Indian Wrestling Federation
இந்திய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரத்தை சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்தப்படாததன் காரணமாக அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளதாக சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் கடந்த மே மாதத்திற்கு முன்பாக நடந்திருக்க வேண்டிய நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் காரணமாக பலமுறை தேர்தலானது ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் கடந்த மே மாதம் சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடிதம் எழுதி இருந்தது. அந்த கடிதத்தில் 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. அதன்படி ஜூலை 15ஆம் தேதிக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரியும் நியமிக்கப்பட்டு ஜூலை 11ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம், அசாம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தேர்தலுக்கு விதித்திருந்த தடை ஆகியவற்றின் காரணமாக ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகின்ற தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் கடந்த மே மாதம் சர்வதேச மல்யுத்தம் கூட்டமைப்பு எழுதி இருந்த கடிதத்தில் தேர்தல் நடத்தவில்லை என்றால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்து இருந்த நிலையில் குறித்த கால இடைவெளியில் தேர்தல் நடத்தப்படாததால் தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் அடுத்து நடைபெற உள்ள சர்வதேச மல்யுத்த போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கு பெறக்கூடிய வீர வீராங்கனைகள் இந்தியா என்று உரிமை கோர முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எந்த நாட்டின் கீழும் வராமல் தனிப்பட்ட முறையில் மல்யுத்த போட்டிகளில் பங்கு பெறுவார்கள். இதனால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
English Summary
UWW has revoked recognition of Indian Wrestling Federation