லோக் ஆயுக்தா வெளியிட்ட விளக்கம்!!! அரசு அதிகாரிகளின் நகை - பணம்,சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?...
value of the jewelry money and property of government officials Explanation issued by the Lokayukta
கர்நாடகா பெங்களூருவில் நேற்று 8 அரசு அதிகாரிகளின் அலுவலகங்களிலும், வீடுகளிலும் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தியிருந்தனர். இது குறித்து லோக் ஆயுக்தா போலீசார் செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது, " அரசு அதிகாரி நஞ்சுண்டப்பா வீட்டில், ரூ. 56 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ. 4,40,000 ரொக்கப் பணம் சிக்கியது. அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 8 கோடியே 46 லட்சத்து 22 ஆயிரம் ஆகும். மேலும் அரசு அதிகாரி கல்லேசப்பா வீட்டில், ரூ. 16,10,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 32 லட்சத்து 92 ஆயிரம் ரொக்கப் பணம் சிக்கியது. அவரது சொத்து மதிப்பு ரூ. 6 கோடியே 50 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதுபோல மின்வாரிய என்ஜினீயரான நாகராஜன் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 18 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். மேலும் கலபுரகியைச் சேர்ந்த அதிகாரியான ஜெகன்நாத்திற்கு ரூ. 4 கோடியே 55 லட்சத்திற்குச் சொத்துக்கள் உள்ளன.

8 அரசு அதிகாரிகள்:
மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான டாக்டர் நாகராஜிக்கு ரூ. 6,14,58,000 மதிப்புள்ள நகை, பணம், வீடு, நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இருக்கிறது. இதே போல் டாக்டர். ஜெகதீசுக்கு ரூ. 3,11,20,000 மதிப்பில்லான சொத்துக்கள் உள்ளன. மேலும் பாகல் கோட்டையைச் சேர்ந்த அரசு அதிகாரி மல்லேஷ் என்ற மல்லப்பாவின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 92 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். முதல் நிலை ஊழியரான சிவானந்தா சிவசங்கரின் சொத்து மதிப்பு ரூ.3,64,30,000 ஆகும் . மேலும் சோதனைக்கு உள்ளான 8அரசு அதிகாரிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 36,53,05,737 ஆகும். மேலும் அவர்களது வீடுகளில் இருந்து,ரூ. 64,78,000 ரொக்கப் பணமும்,ரூ. 3,73,71,000 தங்கம் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளது " என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
value of the jewelry money and property of government officials Explanation issued by the Lokayukta