குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் : பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தங்கர் இன்று வேட்பு மனுவை தாக்கல்.!
Vice President Election BJP Candidate Jagadeep Dhangar filed his nomination today
தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5ம் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற 22-ம் தேதி கடைசி நாள் ஆகும். துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள். மட்டுமே வாக்களிப்பார்கள்.
பாராளுமன்றம் மற்றும் மேல்சபையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பதால் ஓட்டுப்பதிவு பாராளுமன்றத்தில் மட்டுமே நடக்கிறது.
இந்த நிலையில், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தங்கர் இன்று மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
English Summary
Vice President Election BJP Candidate Jagadeep Dhangar filed his nomination today