ஏய் பொண்ணே உன் ரெட் எவ்ளோ! எங்க அப்பா டிஎஸ்பி! ஷாப்பிங் மாலில் பெண்ணுக்கு நடந்த கொடுமை! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் வணிக வளாகத்தின் வெளியே கணவருடன் நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்து ரேட் என்ன என்று தகாத முறையில் கேட்ட நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் கார்டன் கலரியாமால் வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தினதோறும் மக்கள் வந்து செல்வதால் இந்த வணிக வளாகத்தின் வெளியே எப்போதும் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சம்பவத்தன்று, பெண் ஒருவர் அவரது கணவர் உடனும் அவரது கணவரின் சகோதரனுடனும் வணிக வளாகத்திற்கு வெளியே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மது போதையில் வந்த பெண்ணுடன் வந்த ஒருவர் உனது ரேட் என்ன என்று கேட்டது மட்டுமில்லாமல் என் அப்பா, மாமா எல்லாருமே டிஎஸ்பி என்று தெரிவித்துள்ளார்.

கணவன் கண்முன்னே மனைவியின் ரெட் என்ன கேட்டதால் கோபம் அடைந்த கணவன் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையான வாக்குவாதம் கைகலப்பாக மாறி உள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் அழுது கொண்டே தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். இதுதான் முதல்வர் யோகி பேசும் நீதியா என்று கேள்வியும் எழுப்பி உள்ளார். தற்போது இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

video of a woman standing with her husband outside a shopping complex in Uttar Pradesh and asking what the rate is has gone viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->