திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருமலை கோவிலில் வெளிநாடு, மாநிலம் மற்றும் மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதிலும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த இலவச தரிசனம், விஐபி தரிசனம் என்று பல வழிகள் இருக்கின்றது.

இந்த நிலையில், ஆனி மாத ஆஸ்தானத்தையொட்டி 9 மற்றும் 16-ந் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது;- "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனி வார ஆஸ்தானம் 16-ந் தேதி நடக்கிறது.

இதனையொட்டி 9-ந்தேதி கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது . 9-ந்தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது . இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. எனவே 9-ந்தேதியும் ஆனிவார ஆஸ்தானம் நடைபெறும் 16-ந் தேதியும் 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vip dharisanam cancelled in tirupati


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->