வைரலாகும் செல்ஃபி: சமூக வலைத்தளத்தில் மோடி பதிவு! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியன் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உடன் எடுத்துக்கொண்ட செல்பி வைரலானதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி துபையில் நடைபெற்ற 'காப் 28' பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட போது இத்தாலி பிரதமருடன் செல்பி எடுத்துள்ளார். 

இதனை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்த இத்தாலி பிரதமர், 'காப் 28 இல் நல்ல நண்பர்கள்' என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இருவரது பெயரையும் இணைத்து 'மெலோடி' என்ற வார்த்தையை பதிவிட்டிருந்தார். 

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் ஜியார்ஜியாவின் பதிவை பகிர்ந்த நரேந்திர மோடி, 'நண்பர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்விக்க கூடியது' என பதிவிட்டுள்ளார். 

துபையில் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மோடி இத்தாலி பிரதமர் உட்பட பல்வேறு நாடுகளில் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து விட்டு நேற்று நாடு திரும்பியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viral selfie Modi post on social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->