மோடியை எச்சரித்த விராட் கோஹ்லி!
மோடியை எச்சரித்த விராட் கோஹ்லி!
ஜம்மு-காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 8 வயது சிறுமி ஆசிஃபாக்கு நடந்த கொடூரம் பற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஆசிஃபா 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். மேலும் அவர்களை கைது செய்தற்காக பிஜேபியின் ௨ பேர் தங்களது பதவியையும் ராஜினாமா செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மேலும் இந்த விஷயம் தற்போது ஒரு தேசிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. தற்போது இது சம்மந்தமாக இந்திய கிரிக்கட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்,
*நான் உங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன், உங்கள் குடும்பத்தில் இப்படி விஷயம் நடந்தால், அதையும் இதேபோல் நின்று வேடிக்கைதான் பார்ப்பீர்களா, இல்லை நீங்கள் சென்று குரல் கொடுப்பீர்களா?,
*சிலர் இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்க அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு விஷயம் நடக்கும் போது அவர்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். அது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இல்லை. ஒரு சிறுமிக்கு இப்படி நடப்பது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இல்லை
*'சில ஆண்கள் இதுதான் வாய்ப்பு என்று தவறு செய்கிறார்கள். பின் அதில் இருந்து தப்பிக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களும், அதற்கு ஆதரவாக பேசுகிறார்கள். இதைவிட மோசமான விஷயம் என்ன இருக்க முடியும்.
*நம் சமூகத்தில் சிலர் இது போன்ற விஷயங்களை எளிதாக சகித்துக் கொள்கிறார்கள். அதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இது போன்ற சமூகத்தில் இருக்கவே வெட்கமாக இருக்கிறது.
*நம்முடைய சிந்தனைகளை நாம் மாற்ற வேண்டும். நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் என்று நினைத்து பாருங்கள். பொறுப்பானவர்களாக இருங்கள். ஜெய் ஹிந்த். என்று அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.