மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் கலவரத்தில் 15 பேர் பலி! துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, வெட்டுக்குத்து!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநில ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவின்போது, அரசியல் கட்சியினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

அம்மாநிலத்தில், இன்று காலை 7 மணிக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது முதல் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.

குறிப்பாக முர்ஷிதாபாத், கூச் பேஹார் மாவட்ட பகுதிகளில் கொடூரமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. தொடர்ந்து பதற்றமான பகுதியாகவே இந்த இரு பகுதிகளும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதேபோல், தின்ஹடா பகுதியில் கள்ள ஓட்டுகள் போட்டதாக அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில், வாக்குச்சாவடி மையம் அடித்து நொறுக்கப்பட்டு, வாக்குப் பெட்டிக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் இதுவரை நடந்த வன்முறை சம்பவங்களில் 15 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரர்கள், 70,000 மாநில போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டும் இந்த வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது.

அரசு தரப்பில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை யாரும் பார்க்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்த நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தா போஸ் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

West Bengal Local Body Election Clash 9 dead


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->