திருமணமான இரண்டே வாரத்தில் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி; காதலன் உடந்தை..!
Wife kills husband by hiring mercenaries within two weeks of marriage in UP
உத்தர பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகதி யாதவ் 25. அதே பகுதியை சேர்ந்த திலிப் 26. இவர்கள் இருவருக்கும் கடந்த 05-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் அனுராக் யாதவ் 26, பிரகதியும், அனுராக்கும் கடந்த 04 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என முடிவு செய்தனர். இதனால் பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், பிரகதியின் குடும்பத்தினர் இவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரகதிக்கு அவசர அவசரமாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி, இறுதியில் திலீப்பை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், திருமணத்திற்கு பிறகும் பிரகதியால் காதலர் அனுராக் யாதவை மறக்க முடியவில்லை.

எப்படியாவது காதலனுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என நினைத்துள்ளார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவருடைய காதலனுடன் செல்போனில் பேசி மீண்டும் காதலை வளர்த்து வந்துள்ளார். அவர்களுடைய காதலுக்கு கணவர் தடையாக இருக்கும் என்பதால் திலீப்பை கொலை செய்துவிட்டால் காதலருடன் மீண்டும் சேர்ந்து விடலாம் என பிரகதி நினைத்துள்ளார்.
இது குறித்து அவருடைய காதலன் அனுராக் யாதவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதித்துள்ளார். இந்நிலையில், இருவரும் சேர்ந்து கூலிப்படையை சேர்ந்த ராமாஜி என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். அவரும் கொலை செய்ய ரூ.2 லட்சம் கேட்க, பிரகதி ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளார்.
கடந்த 19-ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த திலீப்பை மடக்கி ராமாஜி அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்து,துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த திலீப் சரிந்து விழுந்துள்ளார்.

உயிருக்கு போராடிய திலிப்பை கூலிப்படையினர் அங்குள்ள விவசாய நிலத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். விவசாய நிலத்தில் கிடந்த திலீப்பை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திலீப்பை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் , அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திலீப் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய நிலையில், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது, கூலிப்படை தலைவன் ராமாஜியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் உண்மை வெளிவந்துள்ளது. அதனை தொடர்ந்து, பிரகதி யாதவ் அவருடைய காதலன் அனுராக் யாதவ், கூலிப்படை தலைவன் ராமாஜி ஆகிய03 பேரையும்போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். திருமணமான 02 வாரத்தில் கணவரை கூலிப்படை ஏவி இளம்பெண் கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Wife kills husband by hiring mercenaries within two weeks of marriage in UP