இந்தியாவில் சட்டவிரோத குடியுரிமை செல்லுமா?...உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


1966-ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 25, 1971-க்கு இடையிலான காலக்கட்டத்தில், இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து அசாமுக்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக 1985ம் ஆண்டில் அசாம் ஒப்பந்தத்தில் குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ இணைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அசாம் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் குடியுரிமை சட்டம் 1955ன் பிரிவு 6ஏ-வை எதிர்த்து  வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கினை விசாரித்த  தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த், சுந்த்ரேஷ், பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4:1 என்ற பெரும்பான்மையில் இந்த சட்டப்பிரிவு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவு செல்லும் என்று தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இதற்கிடையே இந்த விசாரணையின் தீர்ப்பிற்கு நீதிபதி பர்திவாலா மட்டும் குடியுரிமை சட்டத்திற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது  குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will illegal citizenship go in india the supreme court sensational verdict


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->