செல்போன் பேசுவதற்கு இடையூறாக இருந்த குழந்தை - ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம்.!
woman arrested for kill son in jharkhand
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிடிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நிசாமுதீன் - அப்சனா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட் வந்துள்ளது.
அதன் படி, இருவருக்குமிடையே கடந்த வியாழக்கிழமை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்சனா, தனது மகனுடன் வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை மூடிவிட்டு செல்போனில் யாருடனோ பேசியுள்ளார்.
அப்போது அப்சனாவின் மகன் தொடர்ந்து அழுதபடி இருந்ததனால், அப்சனாவுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அப்சனா மகனின் கழுத்தை நெரித்ததனால், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அப்சனா, பூட்டியிருந்த அறையை திறந்துள்ளார்.
அந்த நேரத்தில், அறைக்குள் வந்த அப்சனாவின் கணவன் நிசாமுதீன் தன் மகன் அசைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அப்சனாவை கைது செய்தனர். மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman arrested for kill son in jharkhand