பெற்ற குழந்தையை 2 லட்சத்துக்கு விற்ற தாய் - கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பெற்ற குழந்தையை 2 லட்சத்துக்கு விற்ற தாய் - கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!

மேற்குவங்க மாநிலத்தில் நரேந்திரபூரைச் சேர்ந்தவர் சுக்லா தாஸ். கணவரை இழந்த இவருக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். அந்த சிறுவன் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சுக்லா தாஸ்க்கு பக்கத்து வீட்டு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் அவர் கர்ப்பமானார். இந்தக் கருவை சுக்லா தாஸ் கலைக்க முயன்றார். ஆனால், அந்தக் கரு 26 வாரங்கள் ஆனதால், அதனைக் கலைக்க முடியாத நிலை ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது.

பின்னர் சுக்லா தாஸ் அந்தக் குழந்தையை விற்க முடிவு செய்து இதற்கான ஏற்பாட்டை இடைத்தரகர் தபஸ் மொந்தல் மற்றும் அவரது மனைவி சாந்தி உள்ளிட்டோர் மூலம் செய்தார்.

அதன் படி குழந்தையை கொல்கத்தாவின் பஞ்சாசயர் பகுதியைச் சேர்ந்த ஜூமா மாலிக் என்பவரிடம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சுக்லா தாஸின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் பேரில் நரேந்திரபூர் போலீஸார் சுக்லா தாஸை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுக்லாதாஸ் முறைதவறிப் பிறந்த குழந்தைப் பற்றி சமூகம் தவறாக நினைக்கும் என்பதால், தனது குழந்தையை விற்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் பச்சிளம் குழந்தையை மீட்டு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் குழந்தையை விற்ற சுக்லா தாஸ், வாங்கிய ஜூமா மாலிக், இடைத்தரகராக செயல்பட்ட தபஸ் மொந்தல் அவரது மனைவி சாந்தி ஆகியோரையும் கைது செய்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for sale baby in west bengal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->