பெங்களூர் : மழை வெள்ளத்தில் சிக்கிய கார் - இளம்பெண் பலி.!
woman died for car stuck rain floods in banglore
பெங்களூர் : மழை வெள்ளத்தில் சிக்கிய கார் - இளம்பெண் பலி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கே. ஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அப்போது, இந்த சுரங்கப்பாதை வழியாக வந்த கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால் காரின் எஞ்சின் அணைந்து விட்டது. கார் எங்கிருந்து எடுக்க முடியாமல் அவர்கள் தவித்துள்ளனர். இதையடுத்து ஓட்டுநர் அங்கிருந்து காரை எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அதற்குள் மழை வெள்ளம் அதிகமாகச் சுரங்கப்பாதைக்குள் புகுந்துள்ளது.
இதனால் கார் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அதில் மொத்தம் ஆறு பேர் பயணம் செய்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காரில் இருந்த ஆறு பேரில் ஐந்து பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒரு பெண் மட்டும் நீரில் மூழ்கி மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். உடனே போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அந்த பெண் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman died for car stuck rain floods in banglore