கேரளாவில் பன்றிக் காய்சலுக்கு பெண் பலி!....முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பன்றி காய்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் அருகே எரவு பகுதியைச் சேர்ந்த மினி  என்ற பெண், சமீபத்தில் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரை பரிசோதித்த போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து மருத்துவர்களின்  கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், சிகிக்சை பலனின்றி மினி  நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்த பெண் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து, திருச்சூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்  தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman dies of swine flu in Kerala Precautionary tasks intensive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->