ஐ.சி.யு.வில் இருந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்..மர்ம நபரை தேடும் போலீஸ்!
Woman sexually harassed in ICU Police searching for the suspect
ஐ.சி.யு.வில் இருந்த விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் வசித்துவரும் விமான பணிப்பெண் ஒருவர் பிரபல விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த விமான பணிப்பெண் ஓட்டலில் தங்கியிருந்தபோது, பயிற்சி பெறுவதற்காக, நீச்சல் குளத்திற்கு சென்றபோது நீரில் மூழ்கி இருக்கிறார்.
உடனடியாக இதுபற்றி தகவல் அறிந்ததும், அவருடைய கணவர் அந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.அரியானாவின் குர்காவன் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு, பிராணவாயு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 5-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தில், அவருக்கு தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு அவசரகால சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் அந்த பெண்ணை ஐ.சி.யு.வில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார் என சிகிச்சை முடிந்து கடந்த ஞாயிற்று கிழமை வீடு திரும்பிய அந்த விமான பணிப்பெண் கணவரிடம் நடந்த விசயங்களை பற்றி கூறியிருக்கிறார்.
அரை மயக்கத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என அந்த விமான பணிப்பெண்போலீசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து இதுபற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 4 ஆண்டுகளில் 3-வது முறையாக நடந்த சம்பவம் இது என கூறப்படுகிறது.
English Summary
Woman sexually harassed in ICU Police searching for the suspect