தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண்... திடீரென நகர்ந்த சரக்கு ரெயில் - பெண்ணின் கதி என்ன?
women cross railway trake unhurt after train runs
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பெண் ஒருவர் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் அடியில் நுழைந்து தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திடீரென சரக்கு ரெயில் நகர தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் இருந்து ஆக்ராவுக்குப் புறப்படுவதற்குத் தயாராக சரக்கு ரயில் ஒன்று நடைமேடை 1 இல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது சரக்கு ரயிலுக்கு அடியில் சென்று தண்டவாளத்தை கடக்க இரண்டு பெண்கள் முயற்சி செய்தனர்.
அவர்களில் ஒருவர் சரக்கு ரெயிலின் அடியில் ஊர்ந்து சென்றபோது, ரெயில் திடீரென நகரத் தொடங்கியதையடுத்து அந்தப் பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த, ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் சரக்கு ரெயிலை முன்னோக்கி நகரவிடாமல் நிறுத்துமாறு கத்திக் கூச்சலிட்டனர். பொது மக்களின் அலறல் சத்தத்திற்கு பிறகும் சரக்கு ரயில் நிற்கவில்லை.
அதிர்ஷ்டவசமாக, சரக்கு ரெயில் அந்த பெண்ணுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது. இதனால் நூல் இழையில் அந்தப்பெண் உயிர் பிழைத்தார்.
English Summary
women cross railway trake unhurt after train runs