05 வயது சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவன்; பிறப்புறுப்பில் பலத்த காயம்; குடிபோதையில் கொடூரம்..! - Seithipunal
Seithipunal


05 வயது சிறுமியை மது போதையில் 17 வயது சிறுமியை கொடூரமாக சீரழித்துள்ளான். மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் போது சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். 

மேலும் சிறுமியை கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளான். சிறுமி உடலில் ரத்தக்கறைகள் மற்றும் பலத்த காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். இவ்வாறு சிறுமியை கண்டு  அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக சிறுமியை சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அரசு மருத்துவமனை டீன் கூறுகையில்;

"சிறுமி மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவளது பிறப்புறுப்புப் பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன. அவளுடைய தாடை மற்றும் தலையில் ஆழமான காயங்கள் இருந்தன. சிறுமிக்கு மொத்தம் 28 தையல்கள் போடப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் கற்பனை செய்ய முடியாத கொடூரத்துடன் சிறுமி கையாண்டுள்ளான். கடவுளின் அருளால் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடிந்தது." என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவுகளையும் செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளார். 

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறதாக கூறியுள்ளனர். 05 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இனி இதுபோன்ற கொடூரமான குற்றத்தைச் செய்ய யாரும் நினைத்து கூட பார்க்காத அளவுக்கு குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 17 year old boy who abuse a 5 year old girl while drunk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->