கைது செய்யப்படுகிறாரா சீமான்! உச்சகட்ட பரபரப்பில் சென்னை!
Naam tamizhar party Seeman may be arrest
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது.
நேற்று ஆஜராகவில்லை. இதனால், இன்று காலை 11 மணிக்குள் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், இல்லையெனில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
இந்நிலையில், காவல்துறை அழைப்புக்கேற்ப, இன்று மாலை 6 மணிக்குள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க முடிவெடுத்ததாக தகவல் வெளியானது.
பின்னர், இரவு 8 மணிக்கு அவர் காவல் நிலையத்திற்கு செல்வதாக அறிவித்த சீமான், காவல் நிலையம் புறப்பட்ட வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், இரவு 10 மணியளவில் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
இந்நிலையில், சீமானை போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Naam tamizhar party Seeman may be arrest