சோகம் - உ.பியில் செல்போனுக்கு சார்ஜர் போட்ட இளம்பெண் உயிரிழப்பு.!
women died for electric shock attack in uttar pradesh
உத்தரபிரதேச மாநிலத்தில் மொபைல் சார்ஜரிலிருந்து மின்சாரம் தாக்கி, இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டம் சரங்பூர் கிராமத்தைச் சேர்ந்த நீது என்ற இளம்பெண் தனது போனில் இருந்து சார்ஜரை அகற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நீது இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
women died for electric shock attack in uttar pradesh