அன்று செம்பரம்பாக்கம், இன்று சாத்தனூர் அணை! கடலூர் மூழ்க காரணம் என்ன? அன்புமணி இராமதாஸ் அதிர்ச்சி பேட்டி!
PMK Anbumani Ramadoss say about sathunur dam cuddalore vilupuram flood dmk mk stalin
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவிக்கையில், "நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு டிவிட் போட்டு இருந்தார். அதில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால் எவ்வளவு பெரிய உயிர்சேதம் நடந்தது என்றும், அதேசமயம், 'எங்களது ஆட்சியில் இப்படி எல்லாம் இல்லை' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், இன்று அதிகாலை 2 மணி அளவில் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த செய்தி யாருக்கும் தெரியவில்லை.
இதனால் கடலூர் மாவட்டம், குறிப்பாக கடலூர் நகரில் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக இருந்த 90% வீடுகள் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. மக்கள் உடமைகளை இழந்துள்ளனர். உயிர்சேதம் பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருகி, ஆற்றங்கரை ஓரமாக மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது மக்களுக்கு தெரியவில்லை. ஆனால், முதலமைச்சர் வந்து அதிமுக ஆட்சியை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் இந்த இரண்டு ஆட்சியையும் (திமுக, அதிமுக) குறை சொல்ல வேண்டும்.
இதில், நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய காலம் இது. தற்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது, மின்சாரம் இல்லை, யாரையும் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.
எனவே, உடனடியாக தமிழக அரசு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாத்தனூர் அணை திறப்பு பற்றி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் செய்திக்குறிப்பு: டிச.1-ம் தேதி இரவு 7 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை திமுக அரசின் நீர்வளத் துறை விடுத்தது.
அடுத்த 5 மணி நேரத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடியும், அடுத்த 2 மணி நேரத்தில் விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனை சற்றும் எதிர்பாராத 4 மாவட்ட கரையோரங்களில் வசிக்கும் மக்கள் திணறினர். உயிரை பாதுகாத்து கொள்ள, வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், தங்களது உடமைகளை பாதுகாக்க முடியவில்லை. வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கியது. கால்நடைகள் உயிரிழந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
அன்று அதிமுக ஆட்சியில் நள்ளிரவில் செம்பரபாக்கம் ஏரியை திறந்துவிட்டார்கள், இன்று இவர்கள் திறந்து விட்டுள்ளார்கள்.
English Summary
PMK Anbumani Ramadoss say about sathunur dam cuddalore vilupuram flood dmk mk stalin