ஜெயம் ரவியின் ஜீனி படம் - எப்போது வெளியாகிறது?
genie movie release update
'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. அதன் பின்னர் அவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் தீபாவளி பண்டிகையில் 'பிரதர்' படம் வெளியானது. இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் சார்பில், ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள 'ஜீனி' படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்குகிறார். இதில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
genie movie release update