நாளை எந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! முழு விபரம்!  - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் எதிர்பார்த்த வேகத்தில் கரையைக் கடக்காமல் பல மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. 

குறிப்பாக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 30 மணிநேரம் தொடர் கனமழை பெய்தது. இதனால் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

மழை பாதிப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த வியாழன் கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாளை (டிசம்பர் 3) கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை, சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிப்பு:

மேலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu Fangal Cyclone School College Leave update 03 dec 2024


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->