10 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் கடந்த 28-ந் தேதி வெளியானது. டீசரில் எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு.... என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

அத்துடன் டீசர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் 10 மில்லியன் அதாவது 1கோடி பார்வைகளை கடந்து, தற்போது யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இதுகுறித்த பதிவை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidamuyarchi movie teaser cross ten millian views


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->