தோழனுடன் பைக்கில் சென்ற மாணவி - மரக்கிளை முறிந்து விழுந்து பலி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அனா மேரி. இவர் நேற்று மாலை தனது தோழனான கல்லூரி மாணவன் அதப் அப்பெக்கர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அதன் படி இவர்கள் எர்ணாகுளம் மாவட்டம் சம்பன்குட்டி கிராமம் அருகே நாகராம்புரா வனப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, இவர்கள் மீது திடீரென வனப்பகுதியில் உள்ள மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனே இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவி அனா மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும், அதப் அப்பெக்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மரக்கிளை முறிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம்ந பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women died for tree fell down on body in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->