ரூ.1292 கோடி வசூலித்த புஷ்பா 2 - அதிகாரபூர்வ அறிவிப்பு!
pushbha 2 1292 cr
நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான புஷ்பா: 2 திரைப்படம், ரசிகர்களின் பேரதிர்வில் கடந்த டிசம்பர் 5 அன்று வெளியானது.
தெலுங்கு மொழியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பெரிய ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழில் மட்டும் ரூ. 70 கோடி வரை வசூலித்திருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் 10-வது நாளின் மொத்த வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி, புஷ்பா 2 உலகளவில் ரூ. 1292 கோடி வசூலித்துள்ளது.
அல்லு அர்ஜூனின் நடிப்பு, திரைக்கதை மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்ததால், படம் வசூல் சாதனைகளை தொடர்ந்து பதிவு செய்கிறது.