பாஜகவிற்கு பலமே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை தான் - கி.வீரமணி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


வென்றாலும் நாங்கள், தோற்றாலும் நாங்கள் என்ற புதிய ஜனநாயக தத்துவத்தை பா.ஜ.க. உருவாக்கி உள்ளது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் பா.ஜ.க.விற்கு பலமாக உள்ளது. 

சிலரை விலைக்கு வாங்குகிறார்கள். கட்சியை உடைக்கிறார்கள். வென்றாலும் நாங்கள், தோற்றாலும் நாங்கள் என்ற புதிய ஜனநாயக தத்துவத்தை பா.ஜ.க. உருவாக்கி உள்ளது. அதன் பரிசோதனைக்கூடம் தான் உத்தர பிரதேசம்" என்றுத் தெரிவித்துள்ளார்.

அப்போது, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கி.வீரமணி பதிலளித்ததாவது:- "வானவில் அடிக்கடி தோன்றும், ஆனால் சூரியன் என்றும் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k veeramani press meet in kumbakonam about bjp


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->