கோவையில் நடைபெற்ற மிக பிரமாண்ட மாரத்தான் - துவக்கி வைத்த முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு!
Kovai Cancer Awareness
கோவையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பிரமாண்ட மாரத்தான் நிகழ்வை முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு துவக்கி வைத்தார்.
புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சி புற்றுநோய் விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்கள் ஒத்துழைப்பை பெறவும் முக்கியமானதாக அமைந்தது.